Monday, March 15, 2010

காதல் என் எழுத்தில்

காதல் - நூலிலும் நடக்க கற்று கொடுக்கும்.

பிறவிகளில் நம்பிக்கை இல்லை உன்னை காணும் முன் வரை

நிராயுத பாணியாய் நான், நீ மட்டும் விழி எனும் வில்லோடும் பார்வை எனும் அம்போடும் தாக்கினாய் என்னை - நொறுங்கியது என் இதயம்

உன் நினைவோடு உயிர் ஊசல் ஆடுவதை விட உன் நிழலோடு ஓர் நாள் ஈசலாய் சாவதே மேல்

சுமை இல்லா வாழ்க்கை பயணத்தில் கனத்தது இதயம் - உன் நினைவுகளால் !!!

உன் கால் கொலுசு - என் நல்ல நேரத்தை எனக்குணர்த்தும் கடிகார மணி

மனதை தொலைத்த பின்பும் கனமாய் இருப்பதாய் உணர்ந்தேன் - உள்ளே நீ

காதல் - இழந்த பின்பும் (இதயத்தை) நான் வெற்றி அடையும் ஓர் வினையான விளையாட்டு

என் மனதை திருட மட்டுமே உரிமை உண்டு உனக்கு - உன்னுடைய மனதை என்னிடம் இருந்து பறிக்க உரிமை இல்லை

உன் ஸ்பரிசம் - மழையின் முதல் துளி, மண்ணை முத்தம்மிட்டு மண் வாசனை வருவதை போல மிக ரம்மியமான ஓர் உணர்வு

பிரிவே இத்தனை சுகமாய் இருப்பின் நாம் ஏன் ஒன்று சேர கூடாது ???

தலை பிரசவம் - யார் சொன்னது ஆண்கள் பிரசவ வலியை உணர வில்லை என்று ? காதலியிடம் காதலை சொல்லும் வலி ஆணின் தலை பிரசவம்

சுயநலவாதி - சுயநலவாதி என்பர் என்னை, விளங்கவில்லை எனக்கு பல நாள் - உன்னை மட்டுமே நினைத்து கொண்டு இருப்பதால் என புரிந்தது பின்பு

No comments: